ஒவ்வொரு நாளும் பூமியில் 100 தொன் எடையுள்ள சிறிய மணல் துணிக்கையளவு உள்ள விண்கற்கள் விழுகின்றன. அண்ணளவாக இது 14 யானைகளின் நிறைக்குச் சமம்.
வருடத்திற்கு ஒரு முறை, கார் அளவுள்ள விண்கல் ஒன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து தரையை அடையும் முன்னரே பாரிய தீப்பிழம்பாக வானில் எரிந்து சாம்பலாகிவிடும்.
ஒவ்வொரு 2000 வருடங்களுக்கு ஒரு முறை நீலத்திமிங்கிலம் அளவுள்ள விண்கல் பூமியில் மோதும். அதேபோல சில மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை, மனிதகுல எதிர்காலத்தியே கேள்விக்குறியாக்கக்கூடிய விண்கல் பூமியை தாக்கும்.
பயப்பட வேண்டாம், அரிதாக நடைபெறும் இப்படியான ஆபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. விண்கற்களை அணுவாயுதம் கொண்டு தாக்குதல் முதல், விண்கலங்களைக்கொண்டு விண்கற்களில் மோதி அதன் திசையை மாற்றுவது வரை பல்வேறு நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
ஆனால் பூமியை இப்படியான விண்கல் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முதலில் பூமியை தாக்க வரும் எல்லா விண்கற்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். உலகம் முழுதும் இருக்கும் விஞ்ஞானிகள் இதனை அறிந்துகொள்ள மிகத் தீவிரமாக ஈடுபாட்டுடன் செயற்படுகின்றனர். இதுவரை 15000 “பூமிக்கு அண்மிய பொருட்கள்” (Near Earth Objects) கண்டறியப்பட்டுள்ளன – இன்னும் பல கண்டறியப்படவேண்டி உள்ளது.
பூமிக்கு அண்மிய பொருட்கள் அல்லது NEOக்கள் எனப்படுவது பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய சுற்றுப்பாதையைக் கொண்ட விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகளைக் குறிக்கும். இவை எமது பூமியை தாக்கக் கூடிய அபாயம் உள்ளது.
அண்ணளவாக பாரிய NEOக்களில் 90% மானவற்றைக் நாம் கண்டறிந்துவிட்டோம் என்று கருதுகிறோம். அதாவது பத்தில் ஒன்பது NEOக்கள். ஆனால் பத்தில் ஒரு மத்திம அளவுள்ள NEOக்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 100 இல் 99 சிறிய NEOக்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
நாம் தற்போது கண்டறிந்துள்ள 15000 NEOக்களில் ஏதாவது ஒன்று அடுத்த 40 வருடங்களில் பூமியை தாக்குவதற்காக சாத்தியக்கூறு மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் இந்த NEOக்கள் மிக அவதானமாக கண்காணிக்கப்பட வேண்டியவை, காரணம் அவற்றின் பாதைகள் மாறக்கூடும்.
நீங்களும், நானும், முழு சமூகமும் பிரபஞ்ச தாக்குதல் பயிற்சியில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக LCO தொலைநோக்கிகள் ஒவ்வொரு இரவும் வானை தானியங்கியாக மதிப்பாய்வு செய்கிறது.
ஆர்வக்குறிப்பு
சில விண்கற்கள் மிகப்பெரியவை, அவற்றுள் சிலவற்றுக்கு துணைவிண்கற்களும் உண்டு!
Share: