பொதுவாக ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்று கூறுவார்கள். இது விண்வெளிப் புகைப்படங்களுக்கு மிகப் பொருத்தம். அதே கோள்கள், விண்மீன்கள் மற்றும் விண்மீன் பேரடைகளை அவதானிக்கும் ஒவ்வொரு தொலைநோக்கியும் வெவ்வேறு புதிய விடயங்களை கண்டறியும் வாய்ப்பைப் பெரும்!
மேலே உள்ள புகைப்படம் நமது பால்வீதியின் மையப்பகுதின் ஒரு பாகம். பார்ப்பதற்கு சுவரோவியம் போல காணப்படும் இந்தப் படத்தில் இருக்கும் அம்சங்கள் நமது பேரடையில் விண்மீன்கள் எப்படி பிறக்கின்றன என்று புதிய விடயங்களை எமக்குச் சொல்கிறது. முன்னொரு காலத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றைப் பற்றிய துப்பு ஒன்று விண்ணியலாளர்களுக்கு கிடைத்துள்ளது: மிக உக்கிரமான விண்மீன் பிறப்பு பல நூறு சூப்பர்நோவாக்களை வெடிப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்தக் குறுகிய கால வெடிப்புகள் பிரபஞ்சத்தில் மிகமிக உக்கிரமானவையாகவும் சக்தி வாய்ந்தவையாகவும் இருந்துள்ளன. இவற்றின் பிரகாசம் சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை அதனது விண்மீன் பேரடையின் பிரகாசத்தை விடக் கூடுதலாக இருந்துள்ளது. இந்தக் குறுகிய காலத்தில் ஒரு சூப்பர்நோவா சூரியன் தனது வாழ்வுக் காலத்தில் எவ்வளவு சக்தியை வெளியிடுமோ அதே அளவு சக்தியை வெளியிடும்!
நமது கணக்கெடுப்பின் படி பால்வீதியில் இருக்கும் பெருமளவான விண்மீன்கள் மிகவும் வயதானவை. பால்வீதியின் மையப்பகுதியைச் சுற்றியிருக்கும் விண்மீன்களில் 80% மானவை பால்வீதி உருவாகிய காலத்திலேயே உருவானவை. அண்ணளவாக 8 தொடக்கம் 13.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர். நமது பால்வீதியில் கிட்டத்தட்ட 100 தொடக்கம் 400 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம்.
ஆர்வக்குறிப்பு
நமது சூரியத் தொகுதி பால்வீதியின் மையத்திலோ அல்லது அதன் வெளிப்புற எல்லையிலோ இல்லை. ஓராயன் கை எனப்படும் பால்வீதியின் வளைந்த கைபோன்ற அமைப்பில் சூரியத்தொகுதி இருக்கிறது. ஒருமுறை பால்வீதியின் மையத்தை சுற்றிவர சூரியத்தொகுதிக்கு அண்ணளவாக 200 மில்லியன் வருடங்கள் எடுக்கிறது.
Share: