Seguici
iBookstore
Android app on Google Play
Like Us
Un programma di
ஹபிளிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
24 April 2020

ஸ்பேஸ் ஷாட்டில் டிஸ்கவரி மூலம் 1990 ஏப்ரல் 24 இல் நாசா/ஈஸாவின் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்த விண்கலத்தில் பயணித்த 5 விண்வெளி வீரர்களின் உதவியுடன் பூமியில் இருந்து 570 கிமீ உயரத்தில் பூமியை சுற்றிவரக்கூடிய முறையில் நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பிரபஞ்சத்தில் எமக்கு ஒரு புதிய கண்ணாக ஹபிள் திகழ்கிறது என்றால் மிகையல்ல. இது புகைப்படம் எடுத்த ஏனைய கோள்கள், நெபுலாக்கள் மற்றும் விண்மீன் பேரடைகளே இதன் புகழை பறைசாற்றும்.

ஒவ்வொரு வருடமும் அதன் விலைமதிப்பற்ற நேரத்தில் ஒரு சிறிய பகுதியை செலவிட்டு ஒரு விசேட பிறந்த தின படமொன்றை ஹபிள் தொலைநோக்கி எடுக்கும். இந்த வருடம் நாசாவும் ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் சேர்ந்து ஹபிளின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதில் NGC 2014 மற்றும் NGC 2020 ஆகிய நெபுலாக்கள் இடம்பெற்றுள்ளன.

சிவப்பு நிறமாக இருக்கும் NGC 2014 நெபுலாவின் மையத்தில் மினுமினுக்கும் விண்மீன்கள் அவற்றை சுற்றியிருக்கும் ஹைட்ரொஜன் (சிவப்பு நிறத்திற்கு காரணம்) வாயுத்திரள்களையும் தூசு மண்டலங்களையும் வீசியெறிந்துள்ளது.

கீழே மூலையில் நீல நிறத்தில் இருப்பது NGC 2020 நெபுலா. நமது சூரியனைப் போல 15 மடங்கு பெரிய ஒரு விண்மீன் இந்த நெபுலாவின் வடிவத்திற்கு காரணம். பளிச்சிடும் நீல நிறத்திற்கு காரணம் அண்ணளவாக 11,000 பாகை செல்ஸியஸ் வரை வெப்பமான ஆக்சிஜன் வாயுவாகும்!

இரண்டு நெபுலாக்களும் தனித்தனியாக தென்பட்டாலும், இவை இரண்டும் புதிதாக விண்மீன்கள் பிறக்கும் ஒரே பிரதேசத்தை சேர்ந்தவை. நமது சூரியனுடைய 10 பில்லியன் வருட வாழ்வுக் காலத்துடன் ஒப்பிடும் போது, இந்த விண்மீன்கள் சில மில்லியன் வருட வாழ்வுக்காலத்தை கொண்டுள்ளன.

ஈஸா/நாசாவின் ஹபிள் 3 வயது தொடக்கம் 30 வயதுள்ள எல்லோரையும் அதன் 30ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு புத்தாக்க போட்டியில் பங்கெடுக்க அழைக்கிறது. இதில் சித்திரங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள் மற்றும் கணனி ஓவியங்கள் என பலவகையான திறமைகளுக்கும் இடமுண்டு! நீங்களும் பங்கெடுக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆர்வக்குறிப்பு

ஹபிள் தொலைநோக்கி ஒரு பெரிய பஸ் அளவானது!

M Srisaravana, UNAWE Sri Lanka

Share:

Maggiori Notizie
16 September 2020
14 September 2020
10 September 2020
3 September 2020

Printer-friendly

PDF File
1,0 MB